செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டதில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.
செங்கோட்டையில் கொடிகளை ஏற்றி போராட்டம் - குடியரசு தின நாளில் டெல்லியில் பரபரப்பு
Published on

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பஞ்சாப், அரியான மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், குடியரசு தினமான இன்று டெல்லியை நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். டெல்லி காவல்துறை தலைமயகம் அமைந்துள்ள பகுதியில் தடுப்புகள் அமைத்து டிராக்டர்களில் வந்த விவசாயிகளை போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தடுப்புகளை தகர்த்து சென்று அங்கு நின்றிருந்த அரசு பேருந்து காவல்துறை வாகனங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி போர்க்களமானது.

X

Thanthi TV
www.thanthitv.com