ஆம் ஆத்மி MPயே அடித்த அடி... கெஜ்ரிவாலுக்கு அடுத்த தலைவலி... சமயம் பார்த்து Weaponஐ இறக்கிய பாஜக...
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மிக பிரம்மாண்டமான சொகுசு வீடு கட்டியுள்ளதாக பாஜக வீடியோ வெளியிட்டுள்ளது. டெல்லி முழுவதும் குப்பை கூளங்களால் தத்தளிக்கும் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. 'ஷீஸ் மஹால்' என பெயரில் மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் பங்களாவில், ஒவ்வொரு அறையும் பளிங்கால் அமைக்கப்பட்டு, சொகுசு ஃபர்னிச்சர்களுடன் கண்களை கவரும் வகையில் உள்ளது.
கெஜ்ரிவால் சொகுசு வீடு கட்டியுள்ள நிலையில், டெல்லியில் பல பகுதிகள் குப்பைகளாக இருப்பதாக ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் தள பக்கத்தில், கெஜ்ரிவாலின் வீட்டையும், டெல்லியின் மறுபுறத்தையும் வீடியோவாக இணைத்து பகிர்ந்துள்ளார். குப்பை மேடாகவும், சாக்கடை தேங்கிய குண்டும் குழியுமான சாலையும் இருப்பதாக, அந்த பகுதிக்கு சென்று, டெல்லியின் அவல நிலையை ஸ்வாதி மலிவால் காட்சிப் படுத்தியுள்ளார்.
