Delhi | Crime | "2 பேர கொ*னுட்டு வர்றோம்" - ஹாயாக வீடியோ வெளியிட்டு பட்டப்பகலில் வெறியாட்டம்
தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் பொதுவெளியில் இருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜஹாங்கீர்புரி பகுதியில் 4 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 2
இளைஞர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்திற்கு முன்பாக வீடியோவில் தாங்கள் 2 கொலைகளை செய்து விட்டு சுற்றித் திரிவதாக பேசும் காட்சிகள் அவர்கள் இணையத்தில் பகிர்ந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
அதன்பிறகே இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்த நிலையில், பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள், யாரோ ஒருவரின் பெயர், முகவரியை கூறி விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரியாது என கூறிய நிலையிலும் அந்த கொடூரர்கள் தாக்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
