டெல்லியில் 24 மணி நேரத்தில் 3,947 பேருக்கு கொரோனா - டெல்லியில் மொத்த பாதிப்பு 66,602 ஆக உயர்வு

டெல்லியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 947 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் 24 மணி நேரத்தில் 3,947 பேருக்கு கொரோனா - டெல்லியில் மொத்த பாதிப்பு 66,602 ஆக உயர்வு
Published on

டெல்லியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 947 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நோய்த்தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால், கடந்த 24 மணி நேரத்தில் 68 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2ஆயிரத்து 301 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 711 பேர் குணமடைந்தனர். இதுவரை 39 ஆயிரத்து 313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 24 ஆயிரத்து 988 பேருக்கு,

சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com