டெல்லி முதல்வர் தாக்கப்பட்ட விவகாரம் - வெளியான பகீர் பின்னனி

x

டெல்லி முதலமைச்சர் ரேக்கா குப்தா தாக்கப்பட்ட விவகாரத்தால், அவரது வீட்டின் முன்பு சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்றன. டெல்லி முதலமைச்சர் ரேக்கா குப்தா, அவரது வீட்டின் முன் மக்களை சந்திக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக ஒரு மர்ம நபர் அவரை தாக்கினார். அந்த மர்ம நபரை பிடித்து போலீசார் விசாரித்ததில், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத அவர், ஒரு நாய் பிரியர் எனவும், டெல்லியில் தெரு நாய்களை பிடித்து அடைத்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், ஆத்திரத்தில் அவர் முதலமைச்சரை தாக்கியது தெரியவந்தது. இந்நிலையில் கொலை முயற்சி, மக்கள் பணியாளரை தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்