Delhi Car Blast | அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் - முதற்கட்டமாக வெளியான திடுக்கிடும் தகவல்கள்

x

"டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் - தீவிரவாத தாக்குதல்"

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி இரவு கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் தேச விரோத சக்திகளால் மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்தார்.

இது கோழைத்தனமான தாக்குதல் என்றும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

விசாரணையை விரைந்து முடிப்பதோடு, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் யார், அவர்களுக்கு உடந்தையாக இருந்தது யார் என்பதை விரைந்து கண்டுபிடித்து அவர்களை நீதியின் முன் நிறுத்த மத்திய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான நகர்வுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்