திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்ட‌டம்.. உள்ளே சிக்கிய 22 பேர் நிலை? - தலைநகரில் அதிர்ச்சி

x

டெல்லி புராரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்ட‌ட இடிபாடுகளில் 22 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், தீயணைப்புத்துறையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்