டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், 2017, 2018 ஆம் ஆண்டுகளை விட ஒப்பீட்டளவில் இந்த ஆண்டு காற்று மாசு மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.