Delhi | Air Pollutin | AQI | மூச்சு திணறும் தலைநகர்.. வெளியான அலர்ட்
- டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான பிரிவில் நீடிப்பதால், பொதுமக்கள் சுவாச பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.
- டெல்லி ஐடிஓ, இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியிடு 370 புள்ளிகளாகவும், அக்ஷர்தாம், நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் முறையே 422, 434, 393 புள்ளிகளாகவும் மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது.
- இதனால் என்சிஆர் எனப்படும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில், வெளிப்புற விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு மாநில அரசுக்கு காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
- இதனிடையே, டெல்லியில் காற்றின் தரம் அடுத்த 6 நாள்களில் மிகவும் மோசமாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- குறிப்பாக கருவிலுள்ள சிசுக்களையும், முதியவர்களையும் காற்றின் தரம் பாதிப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Next Story
