ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் - 24 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட சகோதரிகள்

ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் இருவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களின் 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் - 24 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட சகோதரிகள்
Published on

இடுப்பு பகுதியில் ஒட்டிப்பிறந்த இரண்டு வயது இரட்டை சகோதரிகள் இருவரை தனித்தனியாக பிரித்தெடுக்கும் அறுவை சிகிச்சையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஈடுபட்டது. இதற்காக 64 மருத்துவ பணியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து, இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட அறுவை சிகிச்சை சனிக்கிழமை காலை 9 மணி வரை நடைபெற்றது. தற்போது நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்துள்ளது என்றும், பிரிக்கப்பட்ட சகோதரிகள் இருவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com