கடன் பிரச்சினை - பிரிந்து சென்ற மனைவி - கணவர் தற்கொலை

x

டெல்லி நிஹால் விஹார் பகுதியை சேர்ந்த விஷால் என்ற இளைஞர் தாம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை நேரலையில் வீடியோவாக பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய கடன் பிரச்சனை காரணமாக தனது மனைவி தன்னையும் தங்களுடைய நான்கரை வயது மகனையும் விட்டுவிட்டு சென்று விட்டதாக கூறி தற்கொலை செய்து கொண்ட அந்த நபர், தன்னுடைய மனைவி தற்போது வேறு ஒருவருடன் உறவில் இருப்பதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார். தன்னுடைய மனைவி இல்லாமல் தம்மால் வாழ முடியாது என வீடியோவில் கூறியுள்ள விஷால், தன்னுடைய மறைவிற்கு பின்னர் தன்னுடைய மகனை தன்னுடைய பெற்றோரின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்