கனமழை - வெள்ளம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் மட்டும் 102 பேரும், கர்நாடகாவில் 54 பேரும் உயிரிழந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்ற பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டக்கப்பட்ட சுமார் 10 லட்சம் பேர், பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.