ஏமனில் கேரள நர்சுக்கு மரண தண்டனை - விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
ஏமனில் கேரள நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவை உச்சநீதிமன்றம், 14ம் தேதி விசாரிக்கிறது. ஏமன் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா செவிலியராக பணிபுரிந்து வந்தார். தனது பாஸ்போர்ட்டை தர மறுத்த, தலால் மஹதிக்கு மயக்க ஊசி செலுத்தி, பாஸ்போர்ட்டை எடுக்க முயன்ற போது அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் அதை நிறுத்தி வைக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை,14-ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
Next Story
