பேருந்தில் ஏறி அமர்ந்த அடுத்த நொடியே மரணம்.. பதறிய பயணிகள் - அதிர்ச்சி வீடியோ

x

கேரள மாநிலம் திருச்சூரில் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் பெண் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வந்நேரி பகுதியைச் சேர்ந்தவர் 56 வயதான லீனா. இவர் இன்று காலையில் திருப்பையாறு பகுதியில் இருந்து திருச்சூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் குச்சி மாவு என்ற பகுதியில் இருந்து ஏறினார் பேருந்து சிறிது தூரம் சென்றிருந்த நிலையில் பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பேருந்து ஊழியர்களும் பயணிகளும் சேர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது உயிரற்ற நிலையில் காணப்பட்டார் பேருந்து பயணத்தின் போது பெண் பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்