நிபா வைரஸால் மரணம்..அச்சத்தில் இருக்கும் கேரளா மக்கள்

x

கேரளாவில் நிபா வைரசுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நடந்த பரிசோதனையில் அவர் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்தது கண்டறியப்பட்டது. இதன்மூலம் 2வது நபர், நிபா வைரசுக்கு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, திருச்சூர் ​ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்