மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
Published on

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே இருந்த 9 சதவீதத்தை 12 சதவீதமாக அதிகரிக்க இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.இதனால் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தொகை நடப்பாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முத்தலாக் அவசர சட்டத்தை மீ​ண்டும் பிறப்பிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com