நாளை மறுநாள் விடிந்தால் ஏமனில் `தூக்கு’ - காப்பாற்றுமா இந்தியா?
ஏமனில் இந்திய செவிலியருக்கு மரண தண்டனை - பிரதமருக்கு கேரள முதல்வர் மீண்டும் கடிதம்
கேரள செவிலியர் நிமிஷ பிரியாவின் மரண தண்டனை விவகாரத்தில் உடனடியாக தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் என்பவரை கொலை செய்ததாக அந்த நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள செவிலியர் நிமிஷ பிரியாவுக்கு வரும் 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அவரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
Next Story
