பெற்ற தாயை கொடூரமாக தாக்கிய மகள் - அதிர்ச்சி வீடியோ
கர்நாடகாவில் பெற்ற தாயை மகளே கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மங்களூரு அருகே மூடுஷெட்டே பகுதியைச் சேர்ந்த பெண்மணி, தனது மகள் தன்னை துன்புறுத்துவதாக பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணைக்காக அந்த பெண்மணியின் மகளை அதிகாரிகள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வரவழைத்தனர். அங்கு ஆவேசத்துடன் வந்த மகள், பெற்ற தாய் என்றும் பாராமல், அவரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
Next Story
