தினமும் ரூ. 1 கோடி பரிசு - நாட்டின் வாயை பிளக்க வைத்த அறிவிப்பு
கேரள லாட்டரித்துறை சார்பில் புதிய திருத்தப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன்மூலம் இனி நாள்தோறும் முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. வாராந்திர லாட்டரியில் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. 50 ரூபாய் விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு கோல்டன் கேரளா என பெயரிடப்பட்டுள்ளது. முதன்முறையாக, சிறு முகவர்களுக்கு ஏழு லட்சம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த லாட்டரி டிக்கெட்டுக்கான 2வது பரிசு 75 லட்சம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள லாட்டரி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
