குற்றச்செயல்களை தடுக்க சைக்கிள் படை - களமிறங்கிய GJ போலீஸ்

குஜராத் மாநிலம் சூரத்தில், சைக்கிளில் சென்றபடி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் குற்றச்செயல்களை கண்காணிக்கும் வகையில், போலீசார் இருசக்கர வாகனம், கார்களில் செல்வதற்கு பதிலாக, சைக்கிளில் ரோந்து சென்றனர். இதன்மூலம் அனைத்து இடங்களையும் கண்காணிக்க முடிவதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com