ஸ்கேமர்ஸ்க்கு ஆப்படிக்கும்அரசு..போலீஸ் ஸ்டேஷனே தேவையில்லை..போன் தொலைந்தாலும் உடனடி தீர்வு | Cyber

x

தேசிய அகன்ற அலைவரிசை திட்ட தொடக்க விழா டெல்லியில் நடைபெற்றது. இதனை மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள தொலைத்தொடர்பு

சிறப்பு தலைமை இயக்குனர் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சஞ்சார் சாதி மொபைல் ஆப் சேவையானது தொடங்கிவைக்கப்பட்டது.

செல்போன் அழைப்புகள் மூலம் நடைபெறும் திருட்டு, வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி நடைபெறும் திருட்டு போன்றவற்றிற்கு எங்கு எவ்வாறு புகார் அளிப்பது என்பது பற்றி வாடிக்கையாளர்களுக்கு இதுவரை போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்காகவே பிரத்யேகமாக சஞ்சார் சாதி மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செல்போனுக்கு வரக்கூடிய ஸ்பேம் கால்கள் தொடர்பாகவும் இந்த ஆப் மூலம் புகார் அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

செல்போன் தொலைந்து விட்டால் ஐ.எம்.இ-ஐ- நம்பரை பதிவு செய்து குறிப்பிட்ட செல்போனை பிளாக் செய்யவும், திருடப்பட்ட செல்போனின் லொகேஷனைக் கண்டுபிடிக்கவும் இந்த ஆப் உதவுகிறது.

மேலும், நமது அடையாள அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்தி யாராவது நம் பெயரில் புதிய செல்போன் இணைப்புகளை வாங்கி இருக்கிறார்களா என்பதையும் கண்டுபிடித்து நீக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து வரும் மோசடி கால்கள் பற்றியும் இருந்த இடத்திலிருந்தே இந்த ஆப் மூலம் நாம் புகார்

அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சார் சாதி போர்டல் மூலம், திருடப்பட்ட மற்றும் காணாமல் போன 25 லட்சம் கைபேசிகளை செயலிழக்க செய்து, அவற்றுள்

15 லட்சம் கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்