வாடிக்கையாளர்களே உஷார்... ஆவணங்களை பயன்படுத்தி பண மோசடி - கிளை மேலாளர் கைது
ஈரோட்டில் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை வைத்து 27 லட்சம் ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடுமுடியில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிதி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், மகளிர் குழுக்கடன், தனி நபர் கடன் போன்றவைகளை வழங்கி வருகிறது.
இதில், திருச்செங்கோட்டை சேர்ந்த கோகுல் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், 46 வாடிக்கையாளர்களின் கடன் ஆவணங்களின் மீதும், கடன் தொகை செலுத்தியவர்களின் பணம் என 27 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரில் வழக்குபதிந்த ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கோகுலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
