ஆற்றுநீரில் அடித்து வரப்பட்ட முதலை - 12அடி நீள முதலையை பிடித்த வனத்துறையினர்

மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிக்கு அடித்து வரப்பட்ட முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர்.
ஆற்றுநீரில் அடித்து வரப்பட்ட முதலை - 12அடி நீள முதலையை பிடித்த வனத்துறையினர்
Published on

மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிக்கு அடித்து வரப்பட்ட முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர். சங்க்லி நகரில் உள்ள கிருஷ்ணா நதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாம்புகளும், முதலைகளும் குடியிருப்பு பகுதிக்கு படையெடுப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், Walwa பகுதிக்கு முதலை ஒன்று ஆற்றுநீரில் அடித்து வர அதனை பார்த்ததும் அச்சமடைந்த கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை வீரர்கள் கயிறுக்கட்டி 12 அடி நீள முதலையை பிடித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com