"மணிப்பூர் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்" கே.எஸ் அழகிரி பரபரப்பு பேச்சு

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் உலக மனித குலத்தின் மனசாட்சியை உலுக்கியது. ஆனால் பிரதமர் மோடியின் மனசாட்சியை மட்டும் உலுக்கவில்லை. மணிப்பூர் சம்பவத்தில் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். மக்கள் மன்றத்தில் இதற்கு நியாயம் கேட்கிறோம். மோடிக்கு எதிராக ஒரு மிகப்பெரிய மன உணர்ச்சி ஏற்படுகிறது. மோடி குற்றத்திற்கு துணை போகக்கூடாது என்றார்

X

Thanthi TV
www.thanthitv.com