பிக்கப் வாகனத்தில் கயிற்றால் கட்டி இழுத்து செல்லப்பட்ட மாடு
ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் ஒருவர் பசுவின் காலில் கயிற்றை கட்டி அதனை பிக்கப் வாகனத்தில் இணைத்து இழுத்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வயலில் பசு மேய்ந்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை கயிறு கட்டி இழுத்துச் சென்றதில் பசுவின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
