நாய்கள் துரத்தியதால் 3வது மாடிக்கு ஏறிய பசு மீட்பு

x

மகாராஷ்டிர மாநிலம் புனேயில், நாய்களிடம் இருந்து தப்பிக்க, ஒரு கட்டிடத்தின் 3வது மாடிக்கு ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். புனே ரவிவர் பெத் பகுதியில் ஒரு பசுமாட்டை நாய்கள் துரத்திச் சென்றன. இதனால் அங்கும் இங்கும் மிரண்டு ஓடிய பசு, ஒரு கட்டிடத்தின் குறுகிய மரப்படிக்கட்டில் 3வது மாடிக்கு ஏறிவிட்டு கீழே இறங்க முடியாமல் தவித்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், கிரேன் உதவியுடன் பசுமாட்டை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்