கேரள மாநிலம் இடுக்கியில் கேரள இளைஞர் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தன்னார்வ இளைஞர்கள் செயல்பாட்டு குழு சார்பில் எல்.இ.டி பல்பு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எல்.இ.டி பல்பு தயாரிக்கும் பயிற்சி அரசால் வழங்கப்பட்ட நிலையில், அதன் மூலம் பல்புகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பல்புகள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது என அக்குழுவின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.