Couples | Pets | செல்லப்பிராணியால் சண்டை - இளம்ஜோடிகள் எடுத்த விபரீத முடிவு

x

மத்திய பிரதேசத்தில் செல்லபிராணிகளால் ஒரு ஜோடி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபாலில் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட தம்பதி, வீட்டில் நாய், பூனைகளை வளர்த்து வந்துள்ளது.

இதில் கணவர் நாய் வளர்ப்பது மனைவிக்கும், மனைவி பூனை வளர்ப்பது கணவருக்கும் பிடிக்காமல் இருவரும் தொடர்ந்து சண்டை போட்டுள்ளனர்.

குறிப்பாக, கணவரின் நாய் பூனையை துன்புறுத்துவதாக மனைவியும், தனது மனைவியின் பூனை வீட்டில் வளர்க்கும் மீன்களை சாப்பிடுவதால் சண்டை வருவதாக கணவரும் மாறி மாறி புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்