கடன் பிரச்சினை - இரு குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை

கடன் பிரச்சினை - இரு குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை
Published on

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் சோட்டானிக்கரை பகுதியை சேர்ந்த தம்பதி ரஞ்சித் - ரஷ்மி. இருவரும் ஆசிரியர்களான நிலையில், தம்பதிக்கு 9 வயதில் ரஷ்மி என்ற மகனும், 7 வயதில் ஆதியா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், தம்பதி இருவரும் பணப் பிரச்சினையிலும், கடன் நெருக்கடியிலும் சிக்கி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தன் இரு குழந்தைகளுடன் சேர்ந்து தம்பதி இருவரும், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடிதத்தில், தங்கள் உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களின் படிப்புக்காக, ஒப்படைக்குமாறு குறிப்பிட்டிருந்த நிலையில், சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com