கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பா? - ரத்த மாதிரி எடுத்து சோதனை

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நபர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பா? - ரத்த மாதிரி எடுத்து சோதனை
Published on

கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த, முதியவர் முகமது சித்திக், துபாயிலிருந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சொந்த ஊருக்கு திரும்பினார். ஊருக்கு திரும்பியதில் இருந்து காய்ச்சல் ஜலதோஷம் தொற்று காரணமாக அவதிக்குள்ளாகி வந்த நிலையில், நேற்று திடீரென மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே உசைன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அவர் கரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தார் என்பது தவறான தகவல் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு கரோனா பாதிப்பு, இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு இருப்பதால் அதன் முடிவுகள் வெளியான பின்னரே, கொரோனா பாதிப்பில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரிய வரும் .

X

Thanthi TV
www.thanthitv.com