மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: கர்நாடக சுகாதாரத்துறை தகவல்

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: கர்நாடக சுகாதாரத்துறை தகவல்
Published on
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு கர்நாடகாவில் 8 ஆக இருந்த நிலையில் மேலும் இருவருக்கு இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அண்மையில் லண்டனில் இருந்து திரும்பிய 20 வயதான பெண் மென் பொறியாளருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, கல்புருக்கியில் உயிரிழந்தவரின் 45 வயது மகளுக்கு வைரஸ் பாதிப்பு ஞாயிறன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 60 வயதான மற்றொரு முதியவருக்கு வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், சித்திக் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள் 57 பேரை தனிமைப்படுத்தி சோதனை செய்து வருவதாகவும் அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com