கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்றில் இருந்து மீண்டு எழுபவர்கள் 48.19 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.83 சதவீதமாகவும் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நான்காயிர​த்து 835 கொரோனா தொற்று நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை, மொத்தம் 91,818 கொரோனா நோயாளிகள் குணமாகி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com