

மேற்கு வங்கத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. மேர்கு வங்கம் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அம்மாநில அரசு, இன்று முதல் மே 31 வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்பதால், அச்சத்தில் மதுப்பிரியர்கள் கொரோனா விதிகளைக் காற்றில் பறக்க விட்டு, கூட்டம் கூட்டமாக மதுபானக் கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மேலும் நோய்ப்பரவல் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.