கொரோனா - நோய் எதிர்ப்பாற்றலை கண்டறியும் கருவிகள்

கொரோனா தொற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உருவாகியுள்ளதா என்பதை கண்டறிய, 114 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா - நோய் எதிர்ப்பாற்றலை கண்டறியும் கருவிகள்
Published on
கொரோனாவை உறுதிசெய்யும் ஆர்டிபிசிஆர் சோதனை மற்றும் வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உடலில் உருவாகியுள்ளதா என்பதை கண்டறியும் கருவிகளின் தரத்தை, மத்திய மருந்து மற்றும் தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. அதன்படி இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 114 உபகரணங்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. மேலும்161 நிறுவனங்களின் பிசிஆர் உபகரணங்களுக்கும் தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com