திடீரென அதிகரிக்கும் கொரோனா - 12 பேர்..மக்கள் மத்தியில் புது பீதி
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா உறுதி
புதுச்சேரியில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் மூன்று நாள் சிகிச்சைக்கு பிறகு குணமாகிவிடுவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோரிமேடு டிபி மருத்துவமனையில் 10 ஐசியூ படுக்கைகள், 2 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ள நிலையில் , பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்
Next Story
