சமையல் எரிவாயு மானியம் - ரூ. 12,000 கோடி ஒதுக்கீடு
டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட, மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 30 ஆயிரம் கோடி இழப்பீடாக வழங்கவும் அந்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Next Story
