அரக்கோணத்தில் தொடர் மின்தடை - மது போதையில் பேசும் ஊழியர்கள்.. மக்கள் குற்றச்சாட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தொடர் மின்வெட்டு காரணமாக அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின் தடை குறித்து தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், மின் ஊழியர்கள் மதுபோதையில் பேசுவதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக, தீர்வு காண வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
