கட்டிட தொழிலாளி வீடியோ வெளியிட்டு தற்கொலை

x

பாலக்கோடு அருகே சொத்து தகராறில், கட்டிட தொழிலாளி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் எலங்காளப்பட்டியை சேர்ந்தவர் கோபால். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளாக கடன் தொல்லையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தாய் பழனியம்மாளும், தம்பி பாரதி, அவரது மனைவி பிரியா ஆகிய மூவரும் கோபாலிற்கு சொந்தமான நிலத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த கோபால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர் வெளியிட்ட வீடியோவில், தாய், தம்பி, உட்பட 3 பேரும்தான் தன் தற்கொலைக்கு காரணம் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்