``கலக்கத்தில் பெண்கள்'' - ஆவேசமாக பேசிய பிரியங்கா காந்தி

x

ஜிஎஸ்டியால் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பெண்கள் திணறுவதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி சாடியுள்ளார். டெல்லியில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், அனைத்திலும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் குழந்தைகளுக்குகூட செலவு செய்ய முடியாத நிலை உள்ளதாக சாடினார். மேலும், ஷூ, சீருடை, டூட் பேஸ்ட், டீ, பால் கூட விலையுயர்ந்த பொருளாகிவிட்டதாக சுட்டிக்காட்டிய அவர், மக்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், அவை போதவில்லை எனவும், பெண்கள் மீது மிகப்பெரிய சுமை உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதோடு வேலையில்லா திண்டாட்டத்தால் பெண்கள் இன்னல்களை சந்திப்பதாக பிரியங்கா காந்தி சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்