உப்பு மூட்டை ஏறி சர்ச்சையில் சிக்கிய காங். MP - தீயாய் பரவும் வீடியோ..

x

பீகார் மாநிலம் கதிஹாரில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் எம்.பி தாரிக் அன்வர், தனது கால் தண்ணீரில் நனையாமல் ஒருவர் முதுகில் ஏறிச் சென்றது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, காங்கிரஸ் எம்.பியின் செயலுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உடல்நிலை சரியில்லாத நிலையிலும், வெள்ள பாதிப்பை பார்வையிட சென்றதாகவும், அன்பின் வெளிப்பாடாக மக்கள் தாமாக முன்வந்து முதுகில் சுமந்து சென்றதாகவும் எம்.பி தாரிக் அன்வர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்