டென்ஸ்டன் ராஜா தலைமையில் காங்கிரஸ் சிறுபான்மைத் துறை கூட்டம்
விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்தின பவனில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறை சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறை ஒருங்கிணைப்பாளரும், ஆந்திர மாநிலத்தின் பொறுப்பாளருமான டென்ஸ்டன் ராஜா தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் Y.S. ஷர்மிளா ரெட்டி Agenda-வை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மஸ்தான்வாளி, மாநில சிறுபான்மைத் தலைவர் டாடா காந்தி, இணை பொறுப்பாளர்கள் ஜாவெட் முல்லா, விஜயராஜு, மற்றும் தமிழக சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் துரை அருள்தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய டென்ஸ்டன் ராஜா, ஆந்திர மாநிலத்தில், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் ஓட்டுகளை காங்கிரஸ் பேரியக்கத்திற்கு திரட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார். சட்டவிரோத செயல்பாடுகள், ஊழலின் மொத்த உருவமான தெலுங்கு தேச கூட்டணி ஆட்சியை அகற்றி, ஆந்திரபிரதேசதத்தில் ஷர்மிளா ரெட்டி அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்க நாம் பாடுபட வேண்டும் என்று கூறினார். மேலும் வாக்கு திருட்டுக்கு எதிராகவும், பீகாரில் நடைபெறும் ராகுல் காந்தியின் "வாக்கு அதிகார பேரணி" வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். வரும் 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அயராது உழைத்து ராகுல் காந்தியை பிரதமாராக அமரச் செய்வதே இலக்கு என்று டென்ஸ்டன் ராஜா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
