திருமணமான பெண் கொடுத்த புகார் - பரபரப்பு தீர்ப்பு

x

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமணமானபெண், ஆண் ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியாது என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. திருமணமான பெண் தொடுத்த வழக்கில், கைதான காதலனுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம், இரு தரப்பினரும் தங்களுடைய முந்தைய திருமணம் பற்றி அறிந்திருந்தால், அவர்களுக்கு இடையிலான பாலியல் உறவு, திருமணம் செய்துகொள்வதாக அளித்த வாக்குறுதியுடன் நடந்ததாக கூற முடியாது என்றும் வழக்கின் தன்மைக்கு ஏற்ப இது மாறுபடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்