போட்டு கொடுத்த Ex. கைதி | கைதிகளுடன் சேர்ந்து அதிகாரிகள் செய்த செயல்

x

பணம் பறிப்பு விவகாரம்...திஹார் சிறை அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட்

டெல்லியில் கைதிகளுடன் சேர்ந்து பணம் பறித்த விவகாரத்தில், திஹார் சிறை அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

டெல்லி திஹார் சிறையில் கைதிகளுடன் சேர்ந்து அதிகாரிகள் சிலர் பணம் பறிப்பதாகவும், சிறை வளாகத்துக்குள் சில வசதிகளைப் பெறுவதற்காகச் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் சில நபர்கள், அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் பறிப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் கைதி வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில்

திஹார் சிறை அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்