வைரலான Coldplay கச்சேரி - தில்ஜீத்தை வறுக்கும் நெட்டிசன்கள்
coldplay இசைக்குழுவினர் இந்தியாவில் கச்சேரிகளை நடத்தி வரும் நிலையில், பஞ்சாபி பாடகர் தில்ஜீத் தோசஞ்சை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். பிரிட்டன் நாட்டின் பிரபல இசைக்குழுவான coldplay, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பிரமாண்ட இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறது. முன்னதாக, இந்தியாவில் இசைக் கச்சேரிகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வரை, நாட்டில் நிகழ்ச்சி நடத்த மாட்டேன் என பஞ்சாபி பாடகர் தில்ஜீத் தோசஞ்ச் கூறி இருந்தார். தற்போது coldplay இசைக்குழு நடத்தி வரும் கச்சேரிகளை குறிப்பிட்டு, பாடகர் தில்ஜீத்தை ரசிகர்கள் விமர்சனங்களால் வறுத்தெடுத்து வருகின்றனர்.Coldplay concert goes viral - Netizens roast Diljit
Next Story
