திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய்மை பணிகள் : சர்வ தரிசனம், ​​திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, தூய்மைப் பணிகள் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய்மை பணிகள் : சர்வ தரிசனம், ​​திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து
Published on
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, தூய்மைப் பணிகள் நடைபெற்றது. மூலவர் கருவறை, ஆனந்த நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் கோவில் சுவர்களில் மூலிகை கலவை தெளிக்கப்பட்டது. மூலவர் சன்னதியில் அணிவிக்கப்பட்டிருந்த பட்டு வஸ்திரங்கள் அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இன்று காலை 11 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று சர்வ தரிசனம், ​​திவ்ய தரிசனம் உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள கோவில் நிர்வாகம், இலவச தரிசனத்தில் மட்டும் மாலை 5 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com