iphone மோகத்தால் தற்கொலை செய்து கொண்ட 11ஆம் வகுப்பு மாணவி

x

தந்தை iphone வாங்கி தராதால் 11 ஆம் வகுப்பு மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில் வசித்து வந்த 11 ஆம் வகுப்பு மாயா ராஜ்புத் என்பவர் தனது தந்தையிடம் நீண்ட நாட்களாக iphone வாங்கி தருமாறு அடம்பிடித்துள்ளார். தள்ளுவண்டி வியாபாரம் செய்து வரும் தந்தை, மகளின் ஆசையை நிறைவேற்ற பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டியோ அல்லது, வயலில் விளைச்சலில் உள்ள கடலைப்பயிரை விற்பனை செய்து வாங்கி தருகிறேன் என மகளிடம் கூறியுள்ளார்.

ஆனால் தனக்கு உடனடியாக iphone வாங்கி தரவிட்டால் நடப்பதே வேறு என மகள் எச்சரித்து இருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது iphone வாங்கி தரவில்லை என கூறி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்

சிறிது நாட்கள் கழித்து

தந்தையிடம் iphone கேட்டு நச்சரித்த 11 ம் வகுப்பு மாணவி தனது ஆசையை பெற்றோர் நிறைவேற்றாததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தர் பிரதேச மாநிலம் ஜான்சியில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாயா ராஜ்புத் என்ற மாணவி. இவர் ஏற்கனவே ஆண்ட்ராய்டு போன் ஒன்று வைத்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து அதன் டிஸ்ப்ளே உடைந்து உள்ளது. இதன் காரணமாக தனது ஏழை தந்தை துளசிராம் ராஜ்புத்திடம் தமக்கு ரூ.40,000 மதிப்புள்ள செகண்ட் ஹேண்ட் ஐபோன் ஒன்றை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இருப்பினும் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வரும் ஏழைத் தந்தையான துளசிராமால் அவ்வளவு விலை ஐ போனை வாங்கி கொடுக்க முடியவில்லை.

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டி வரும் சிறுமியின் தந்தை தாங்கள் குத்தகைக்கு எடுத்து நிலத்தில் போட்டுள்ள கடலைப் பயிரை விற்பனை செய்து வரும் பணத்தில் செல்போனை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தந்தையிடம் மீண்டும் தனக்கு iphone வேண்டும் என கூறி நச்சரித்த சிறுமி மாயா இன்னும் இரண்டு நாட்களில் ஐபோன் வாங்கித் தரவில்லை என்றால் என்ன நடக்கிறது என்பதை மட்டும் பொறுத்திருந்து பாருங்கள் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

ஆனால் மகள் மாயாவின் மிரட்டலை தந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று பெற்றோர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனியே இருந்த மாயா தனக்கு ஐபோன் கிடைக்காத விரக்தியில் விஷத்தை குடித்துள்ளார்

இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவரை பெற்றோர் உரை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்த நிலையில் அங்கு மேல் சிகிச்சைக்காக ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்

அங்கு அனுமதிக்கப்பட்டு சிறுமி மாயா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்