வேலைக்கு ஆள் எடுப்பதில் தகராறு - திரிணாமுல் காங்கிரசின் இருபிரிவினர் இடையே மோதல்

எஃகு தொழிற்சாலையில் வேலைக்கு ஆள் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் திரிணாமுல் காங்கிரசின் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
வேலைக்கு ஆள் எடுப்பதில் தகராறு - திரிணாமுல் காங்கிரசின் இருபிரிவினர் இடையே மோதல்
Published on
மேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர் நகரத்தில், எஃகு தொழிற்சாலையில், வேலைக்கு ஆள் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் திரிணாமுல் காங்கிரசின் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்னும் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com