இளைஞர்களிடையே தகராறு...தொழிலாளி கார் ஏற்றிக் கொலை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் தொழிலாளி ஒருவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதாகும் சந்திரசேகர் என்ற தொழிலாளி, ஜெய்ப்பூரில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஜெய்ப்பூர் முர்லிபுரா பகுதியில், சாலையில் இரண்டு கார்கள் மோதியது தொடர்பாக, இரு குழுக்களிடையே தகராறு ஏற்பட்டு, கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் சந்திரசேகர் சாலையில் விழுந்து கிடந்த நிலையில், அவர் மீது வேகமாக கார் மோதியதில் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
