மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இறைச்சி விற்பனையாளர் மீது தாக்குதல்

x

மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் இறைச்சி விற்பனையாளரை இந்து அமைப்பினர் கண்மூடித் தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இறைச்சி விற்பனை செய்யும் ஹாஸ்னைன் என்ற நபரை பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பின் தொண்டர்கள் கால்களால் எட்டி உதைத்தும் அடித்தும் கண்மூடித்தனமாக தாக்கினர்... இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்து அமைப்பினர் அவரை தாக்கிக் கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்