ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இந்த ஆண்டில் நிறைவடையும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று அவர் கூறினார். ஆனாலும் மத்திய அரசு விமான நிலையங்களை பராமரித்து விமானங்களை இயக்க முடியாது என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.